டெல்லியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

  தினத்தந்தி
டெல்லியில் டெஸ்லா ஷோரூம் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

உலக பணக்காரர்களிலும் ஒருவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், டெஸ்லா என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். மும்பை மாநகரத்தின் பாந்த்ரா பகுதியில் இந்தியாவின் டெஸ்லா நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் டெஸ்லாவின் 2-வது ஷோரூம் அமைய உள்ளது. இதற்காக அங்குள்ள ஏரோசிட்டியில் 8 ஆயிரம் 200 சதுர அடி இடத்தை ரூ.17¼ லட்சம் மாத வாடகைக்கு எடுத்து உள்ளது. இந்த ஷோ ரூம் வரும் 11 ஆம் தேதி திறக்கபட உள்ளது.

மூலக்கதை