சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு.. இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சாண் ஏறி முழம் சறுக்கும் என்று பழமொழி ஒன்று சொல்வார்களே, அதற்கு எதிர்மாறாக தங்கம் விலை முழம் ஏறி, சாண் சறுக்கிறது என்றே சொல்லலாம். அதாவது, விலை ஏறும்போது அதிகமாக ஏறுகிறது. ஆனால், குறையும்போது சற்றே விலை குறைகிறது. இதுதான் தங்கம் விலையில் தொடர் கதையாக நடந்து வருகிறது. நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்திற்கும், ஒரு கிராம் ரூ.9,375-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127 என்ற நிலையிலேயே தொடர்ந்தது. இந்த நிலையில் 4வது நாளாக இன்றும் தங்கம் விலை மேலும் சரிந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இன்று தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360 (இன்று) 11.08.2025 - ஒரு சவரன் ரூ.75,000 (நேற்று) 10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560 09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560 08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760 07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200

மூலக்கதை