இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்வு: முதலிடத்தில் ஐபோன்

  தினத்தந்தி
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்வு: முதலிடத்தில் ஐபோன்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்து உள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) இந்தியாவில் 7 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி உள்ளதாக பிரபல தனியார் தரவு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் விற்பனையை 21.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த நிறுவனத்தின் 60 லட்சம் செல்போன்கள் விற்பனையாகி உள்ளன. சாம்சங் நிறுவனத்தின் போன்கள் 30 லட்சம் அளவில் விற்று இந்த பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளன. விவோ நிறுவனம் 3-ம் இடம் பிடித்தது. மாறாக ஒன்பிளஸ், போகா, ஷிவோமி, ரியல்மி ஆகிய சீன நிறுவனங்களில் செல்போன் விற்பனை கடந்த ஆண்டு விற்பனையை காட்டிலும் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை