தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் வின்பாஸ்ட் கார்கள்... என்னென்ன சிறப்பம்சங்கள்?

  தினத்தந்தி
தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் வின்பாஸ்ட் கார்கள்... என்னென்ன சிறப்பம்சங்கள்?

வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைத்து, எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்தவகையில், வி.எப்.6 மற்றும் வி.எப். 7 ஆகிய வேரியண்ட்டுகளில் எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. அவற்றின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வோம்...வின்பாஸ்ட் வி.எப்.7 வின்பாஸ்ட் நிறுவனத்தின் வி.எப்.7 எலெக்ட்ரிக் காரானது, 70.8 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக்குடன் சந்தைக்கு வந்திருக்கிறது. 19 அங்குல சக்கரங்கள், லெவல்-2 அடாஸ் பாதுகாப்பு, வண்ணமயமான ஹெட் அப் டிஸ்பிளே, எல்.இ.டி. விளக்குகள், டியூல் சோன் ஏ.சி., வேகான் லெதர் உள் அலங்காரங்கள், முன்பக்க இருக்கையில் வென்டிலேசன் வசதி, எட்ஜ் டூ எட்ஜ் பனோரமிக் ரூப்... என பெர்பாமன்ஸிலும், வடிவமைப்பிலும் சிறப்பானதாக, இந்த எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளனர். வின்பாஸ்ட் வி.எப்.6 இதுவும் வி.எப்.7 மாடலை போலவே, எஸ்.யூ.வி. வகையை சேர்ந்ததுதான். இதில் 59.6 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரியை பொருத்தியிருக்கிறார்கள். இதன் சக்கர அளவு, 18 அங்குலம். இதிலும் லெவல்-2 அடாஸ் பாதுகாப்பு வசதிகள் நிறைந்துள்ளன. ஆல் எல்.இ.டி. லைட்டிங், கலெக்டட் கார் வசதி, ஹெட் அப் டிஸ்பிளே, இருவண்ண உள் அலங்காரம், பரந்து விரிந்த பனோரமிக் ரூப் வசதிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

மூலக்கதை