புச்சிபாபு கிரிக்கெட் தொடர் வரும் 18-ம் தேதி தொடக்கம்

  தினத்தந்தி
புச்சிபாபு கிரிக்கெட் தொடர் வரும் 18ம் தேதி தொடக்கம்

சென்னை, ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் 18 முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டி.என்.சி.ஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டி.என்.சி.ஏ லெவன், மும்பை, அரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஐதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரி​விலும் முதலிடம் பிடிக்​கும் அணி​கள் அரையிறு​திக்கு முன்​னேறும். அரையிறுதி ஆட்​டங்​கள் ஆகஸ்ட் 31 முதல் செப்​டம்​பர் 3 வரை நடை​பெறுகிறது. இறு​திப் போட்டி செப்​டம்​பர் 6 முதல் 9 வரை நடை​ பெறுகிறது. லீக் போட்​டிகள் கோஜன் ஏ, குரு​நானக் கல்​லூரி உள்ளிட்ட மைதானங்​களில் நடை​பெறுகிறது. இந்த கிரிக்​கெட் தொடர் குறித்த பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் டி.என்​.சி.ஏ தலை​வர் பி.அசோக் சிகாமணி, துணைத் தலை​வர் ஆடம் சையத், சி.எஸ்.கே தலைமை செயல் அதி​காரி காசி விஸ்​வ​நாதன், பொருளாளர் சீனி​வாச​ராஜ், துணை செய​லா​ளர் ஆர்​.என்​.​பா​பா, இணை செய​லா​ளர் சிவகு​மார், புச்​சி​பாபு கிரிக்​கெட் கமிட்​டி​யின் தலை​வர் டி.​வி.ர​வி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். டி.என்.​சிஏ பிரெசிடெண்ட் லெவன் தொடக்க ஆட்​டத்​தில் இமாச்​சல்​ பிரதேசத்துடனும், டி.என்​.சி.ஏ லெவன் அணி, மும்​பை​யுடனும் பலப்​பரீட்​சை நடத்​துகிறது.

மூலக்கதை