புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: மும்பை அணியை வழிநடத்தும் ஆயுஷ் மாத்ரே

மும்பை, ஆல் இந்தியா புச்சிபாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் 18 முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் டி.என்.சி.ஏ பிரெசிடண்ட் லெவன், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் ரயில்வே, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா, பரோடா அணிகளும் ‘சி’ பிரிவில் டி.என்.சி.ஏ லெவன், மும்பை, அரியாணா, பெங்கால் அணிகளும் ‘டி’ பிரிவில் ஐதராபாத், பஞ்சாப், மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், ஜார்க்கண்ட் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் போட்டிகள் 3 நாட்களும், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி 4 நாட்களும் நடத்தப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 6 முதல் 9 வரை நடை பெறுகிறது. லீக் போட்டிகள் கோஜன் ஏ, குருநானக் கல்லூரி உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுவேத் பார்க்கர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணி விவரம்: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), முஷீர் கான், திவ்யான்ஷ் சக்சேனா, சர்பராஸ் கான், சுவேத் பார்க்கர் (துணை கேப்டன்), பிரக்னேஷ் கன்பிலேவர், ஹர்ஷ் அகவ், சாய்ராஜ் பாட்டீல், ஆகாஷ் பார்கர், ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தமோர் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் டிக்ஹுரோல், யஷ்ரேயாஸ் திச் குரவ், யஷ்ரேயாஸ் டிச் குரவ், சில்வெஸ்டர் டிசோசா மற்றும் இர்பான் உமைர்.
மூலக்கதை
