ஒருநாள் தரவரிசை: ரோகித் சர்மா 2வது இடத்துக்கு முன்னேற்றம்

துபாய், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் 784 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் முதல் இடத்தில் நீடிக்கிறார். நட்சத்திர வீரர் விராட் கோலி 4வது இடத்திலும், ஸ்ரேயஸ் அய்யர் 8வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
மூலக்கதை
