லக்னோ அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஜாகீர் கான் விலகல்?

  தினத்தந்தி
லக்னோ அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து ஜாகீர் கான் விலகல்?

புதுடெல்லி,நடந்து முடிந்த ஐபிஎல் 18-வது சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து லக்னோ அணி வீரர்களுக்கு ஓவ்வொரு போட்டிகளின்போதும் ஜாகீர் கான் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இருப்பினும் லக்னோ அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து லக்னோ அணி நிர்வாகம் எஸ்ஏ20 லீக் தொடர், ஹண்ட்ரட் லீக் தொடர்களில் முதலீடு செய்ய தொடங்கியது. இதனையடுத்து 3 அணிகளை கவனிக்கும் வகையில் ஒருவரை தலைமை பொறுப்புக்கு கொண்டு வர லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் லக்னோ அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.

மூலக்கதை