மக்களை இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல - நயினார் நாகேந்திரன்
சென்னை,பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவும் இலவசங்கள், உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், திமுக மட்டும் எப்போதுமே மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக அதை சுட்டிக்காட்டி அரசியலை செய்கிறார்கள்.அதே சமயம், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத கட்சியாகவும் திமுக உள்ளது. இந்த நான்கு ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.காரணம், எப்போது பார்த்தாலும் பெண்களின் தன்மானத்தை சீண்டும் விதம் திமுக தலைவர்கள் மேடையில் பேசி வருகிறார்கள்."அம்மாவுக்கும், மகளுக்கும் ரூ.1000" என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். பின் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் "முகமெல்லாம் பளிச்சென்று உள்ளது, ரூ.1000 வந்ததா?" என்று பொதுக்கூட்டத்தில் கேலி செய்தார். "ஓசி பஸ்" என்று பெண்களைக் கொச்சைப்படுத்தினார் அமைச்சர் பொன்முடி இதே வரிசையில் தான் திமுக பேச்சாளர் தமிழர் பிரசன்னா தற்போது பேசியுள்ளார்.ஒரு வயது முதிர்ந்த பெண்மணி விலைவாசி ஏற்றத்தை சுட்டிக்காட்டும் போது, ஆளுங்கட்சியாக பொறுப்புணர்ந்து பேசாமல், மேடையிலிருந்தே ரூ.1000 பணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியும், இலவசமாக அரிசி வாங்குகிறீர்கள் அல்லவா என நக்கல் செய்தும் பேசியுள்ளார் திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா.இப்படி மக்கள் நலத்திட்டங்களை வழங்குவது போல் வழங்கிவிட்டு மக்களை யாசகர்கள் போல இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல. இந்த ஆணவப் போக்குதான் அவர்களை 1977-லிலும் 2011-றிலும் தோற்கடித்தது.ஒருமுறை 12 வருடம், இன்னொரு முறை 10 வருடமென படுதோல்வியின் படுகுழியிலேயே 22 ஆண்டுகள் விழுந்து கிடக்க வைத்தது.இப்படி, இரண்டாவது முறை ஆட்சிக்கு வரமுடியாமல் அவர்கள் வீழ்வதே அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டதால்தான்!இதோ அந்தப் படுகுழி மீண்டும் வாராய் என அவர்களை அழைக்கிறது! அதற்கு முன், இவ்வாறான ஏளனப் பேச்சுக்களைப் பேசும் தனது கட்சிக்காரர்களின் மீது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்த்தபடி தான் இருக்கிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது .




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
