"கீனோ" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சென்னை,கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிக்க, ஆர்கே திவாகர் இயக்கத்தில் மகாதாரா பகவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களான மூவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் 'கீனோ'. இதுவரை நாவல்களிலோ திரைப்படங்களிலும் சொல்லப்படாத கதை கருவும் கீனோ என்ற கதாபாத்திரமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாகவும் புதுமையானதாகவும் இருக்கும். இந்தத் திரைப்படத்தை எழுதி இசையமைத்து இயக்கி இருக்கும் ஆர்.கே.திவாகர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் இயக்குதல் துறையில் பயின்று சிறந்த முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று ஏ.வி.எம் மெமோரியல் விருது மற்றும் தங்கப் பதக்கமும் பெற்றவர். இவர் இயக்குநர் கதிரிடம் 'காதல் வைரஸ்' படத்தில் உதவி இயக்குநராகவும், இயக்குநர் மிஷ்கினின் 'சித்திரம் பேசுதடி', 'நந்தலாலா' திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி கிருத்திகா காந்தி தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு துறையில் பயின்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று தமிழக அரசின் திரைப்பட விருது பிரிவில் சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாணவ விருதை பெற்றவர். இவர் தமிழ் திரை உலகின் முதல் பெண் படத்தொகுப்பாளர் என்ற சிறப்புக்குரியவர். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மகாதாரா பகவத்தும் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் படப் பதனிடுதல் பிரிவில் முதல் மாணவராக தமிழ்நாடு திரைப்பட விருது பிரிவில் சிறந்த மாணவர் விருதை பெற்றவர். இத்திரைப்படத்தில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா. ரேணுகா சதீஷ் , கண்ணதாசன் ராஜேஷ் கோபிஷெட்டி நடிக்க, இவர்களோடு பல புதுமுக கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள். கதையை எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளார் ஆர்.கே.திவாகர்.கீனோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தயாரிப்பாளர் முரளி ராமசுவாமி, இயக்குநர் கதிர், இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட்டார்கள்.Happy to release the first look poster of debut director R.K.DIVAKAR's 'KEENO' Movie poster.A GCC Production.@gcc70203 @diwakarankrish5@bagavathsinghvn@ghantharvaa@krithikaganthi7@srgopi10@filmmakerkathir@ThenandalFilm@MuraliRamasamy4@vp_offl pic.twitter.com/PoT3FfGSqKமகாதாரா பகவத் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மூலக்கதை
