சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

  தினத்தந்தி
சென்னை  கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06089), ஏப்ரல் 17-ம் தேதியன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.கன்னியாகுமரி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06090), ஏப்ரல் 18ம் தேதியன்று கன்னியாகுமரியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.இந்த ரெயிலில் ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய லக்கேஜ்-கம்-பிரேக் வேன் பெட்டிகள் உள்ளன.இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஜங்ஷன் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை