ரஜினிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்த மாளவிகா மோகனன்

  தினத்தந்தி
ரஜினிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்த மாளவிகா மோகனன்

சென்னை,மலையாள திரைப்படத்தின் சினிமாவில் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் 'மாறன், மாஸ்டர்' படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, இப்படத்தில் அவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள்.தற்போது, தெலுங்கில் பிரபாஸுடன் 'தி ராஜா சாப்' படத்திலும், ரஜினியின் 'கூலி' படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து சர்தார் 2, ஜெயிலர் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் 2019-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுவே அவருடைய முதல் தமிழ் படமாகும். இந்தநிலையில் நடிகை மாளவிகா மோகனன், ரஜினியின் படத்தில் அவருடைய மகளாக நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மாளவிகா மோகனன், "மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், ரஜினி கூட்டணியில் புதிய படம் உருவாக இருந்தது. அந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், கொரோனா காலகட்டத்தினால் அது நடக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்."After Master, #LokeshKanagaraj offered me a film with a film with #Rajinikanth sir. I was supposed to play his daughter's role in the film & then covid came, it did not happened"- MalavikaMohananSeems that story was converted as Vikram & done with KHpic.twitter.com/tw2DnP7QYn

மூலக்கதை