'தலாக்-இ-ஹசன்' நடைமுறையும் முத்தலாக்கும் ஒன்றல்ல: சுப்ரீம் கோர்ட்

தினமலர்  தினமலர்
தலாக்இஹசன் நடைமுறையும் முத்தலாக்கும் ஒன்றல்ல: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி:'முஸ்லிம் மதத்தினர், தலாக் - இ - ஹசன் நடைமுறை வாயிலாக விவாகரத்து பெறுவது, முத்தலாக் போன்றது அல்ல' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக, மத்திய அரசு சட்டத் திருத்தம் மேற்கொண்டது. இதையடுத்து, முத்தலாக் தடை சட்டம் அமலுக்கு வந்தது. அதையும் மீறி, முத்தலாக் வாயிலாக விவாகரத்து பெறுபவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முஸ்லிம் ஆண்கள் விவாகரத்து பெற, தலாக் - இ - ஹசன் என்ற மற்றொரு பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஆண், மூன்று மாதத்தில், மாதத்துக்கு ஒரு முறை தலாக் கூற வேண்டும்.

மூன்றாவது மாதம் தலாக் கூறும் வரை, அவர்களுக்குள் இணக்கம் ஏற்படவில்லை எனில், விவாகரத்து வழங்கப்படும். அதன் பின், திருமணத்தின் போது வழங்கிய நகை, பணம் உள்ளிட்ட அனைத்து பரிசுப் பொருட்களையும், பெண் வீட்டாருக்கு திருப்பி அளிக்க வேண்டும்.

உரிமை மீறும் செயல்


இந்த தலாக் - இ - ஹசன் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெனாசிர் ஹீனா என்ற பெண், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் விபரம்:முத்தலாக் சட்டம், அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தலாக் - இ - ஹசன் நடைமுறையை கண்டுகொள்ளவில்லை. இதுபோன்ற ஒருதலைப்பட்சமான, நீதிக்கும், அரசியலமைப்புக்கும் புறம்பான அனைத்து விதமான தலாக் நடைமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும். இது தன்னிச்சையானது, அடிப்படை உரிமைகளை மீறும் செயல்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெரிந்து கொள்ளுங்கள்


இந்த விவகாரத்தில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த விவகாரம், வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடக் கூடாது. நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல், 'முபாரத்' நடைமுறை வாயிலாகவும், மனுதாரர் விவாகரத்து பெற முடியும். அது குறித்து, உங்கள் வழக்கறிஞரிடம் விபரம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு, வரும் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுடில்லி:'முஸ்லிம் மதத்தினர், தலாக் - இ - ஹசன் நடைமுறை வாயிலாக விவாகரத்து பெறுவது, முத்தலாக் போன்றது அல்ல' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்கள், மூன்று

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை