அதிக வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்த சென்னை ஐ.ஐ.டி.,

தினமலர்  தினமலர்
அதிக வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்த சென்னை ஐ.ஐ.டி.,

புதுடில்லி: சென்னையில் செயல்படும் ஐ.ஐ.டி., எனப்படும் 'இந்திய தொழில்நுட்ப கழகம், 2021- - 2022 கல்வி ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யில் 2021- - 2022 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களில் 1,199 பேரை, 380 நிறுவனங்கள் 'கேம்பஸ் இன்டர்வியூ' மூலம் தேர்ந்தெடுத்துள்ளன.



இதேபோல 231 மாணவர்கள் முன் வேலை வாய்ப்பு சலுகைகளையும் பெற்றுள்ளனர். இதோடு 'இன்டர்ன்ஷிப்' எனப்படும் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மொத்தம் 1,430 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.




'இவ்வாறு தேர்வான மாணவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு 21.48 லட்சம் ரூபாய். இதுவே அதிகபட்ச ஊதியமாக ஆண்டுக்கு 1.98 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது' என, சென்னை ஐ.ஐ.டி., தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஷங்கர் ராம் கூறியதாவது:வேலைவாய்ப்புகள் ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பின் அளவை எடுத்துக்காட்டுகிறது. எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சிஅடைகிறோம்.
இதனாலேயே அதிக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றி, எங்களுடைய பாடத்திட்டங்கள் மற்றும் இணை பாடத்திட்ட வாய்ப்புகளுக்கு சான்று.இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி: சென்னையில் செயல்படும் ஐ.ஐ.டி., எனப்படும் 'இந்திய தொழில்நுட்ப கழகம், 2021- - 2022 கல்வி ஆண்டில் அதிக வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கியுள்ளது.சென்னை ஐ.ஐ.டி.,யில் 2021- - 2022 கல்வி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை