ஆதார் எண் இணைப்பு: ஆணையம் விழிப்புணர்வு

தினமலர்  தினமலர்
ஆதார் எண் இணைப்பு: ஆணையம் விழிப்புணர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-வாக்காளர் அடையாள அட்டையில், ஆதார் எண் இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'செஸ்' போட்டியை மையப்படுத்தி, தேர்தல் கமிஷன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.



தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, தேர்தல்கமிஷன் துவங்கியுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை சேகரிக்க உள்ளனர்.ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.


அந்த வகையில், தமிழகத்தில் தற்போது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகள் நடப்பதால், அதை மையப்படுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, வினியோகம் செய்து வருகிறது.அதில், 'சரியான நகர்வு, சதுரங்கத்தின் வெற்றி; வாக்காளருக்கான சரியான நகர்வு, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது' எனக் குறிப்பிட்டுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளையும் அச்சிட்டுள்ளனர்.


சென்னை-வாக்காளர் அடையாள அட்டையில், ஆதார் எண் இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'செஸ்' போட்டியை மையப்படுத்தி, தேர்தல் கமிஷன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. nsimg3093405nsimg

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை