ரேஷன் கடை வழியே இணையதள சேவை

தினமலர்  தினமலர்
ரேஷன் கடை வழியே இணையதள சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.




மத்திய அரசு, 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில் பொது தரவு மையம் ஏற்படுத்தி, இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன.

அவை, கார்டுதாரர்களின் முகவரிக்கு உட்பட்ட, 2 கி.மீ., துாரத்திற்குள் அமைந்திருப்பதால் மக்களால் எளிதில் செல்ல முடிகிறது. பி.எம்.வாணி திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அறிக்கை தருமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, மே மாதம், கூட்டுறவு துறை சுற்றறிக்கை அனுப்பியது.அதன் அடிப்படையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.



ரேஷன் கடைகளில், 'வைபை' வசதி ஏற்படுத்தி, அந்த கடைக்கு அருகில் இருப்போருக்கு இணையதள சேவை வழங்கப்பட உள்ளது. அங்கு மொபைல் போன், 'லேப்டாப்' எடுத்து வந்து இணையதள சேவைகளை பயன்படுத்தலாம்.இணையதள சேவை பயன்படுத்துவோர், குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைகளுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதனால், ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு வருவாய் கிடைக்கும். அதிக இட வசதியுடன் சொந்த கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில், இத்திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவுத் துறை ஆயத்தமாகி வருகிறது.

சென்னை-தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.nsimg3062163nsimg மத்திய அரசு, 'பி.எம்.வாணி' திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணையதள சேவை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை