குஜராத் மருந்து தரமற்றது என இலங்கை புகார்

தினமலர்  தினமலர்
குஜராத் மருந்து தரமற்றது என இலங்கை புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி-குஜராத்தில் தயாரிக்கப்பட்டு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்து தரமற்று இருந்ததால், 30க்கும் அதிகமானோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த, 'இந்தியானா ஆப்தால்மிக்ஸ்' என்ற நிறுவனம், கண் நோய் தொடர்பான மருந்துகளை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்த, 'மெத்தில் பிரெட்னிசோலோன்' என்ற கண் சொட்டு மருந்து, அண்டை நாடான இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த மருந்தை பயன்படுத்திய 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டிஉள்ளது.

இதையடுத்து, மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'பார்ம்எக்சில்' என்ற மருந்துகள் ஏற்றுமதி கவுன்சில், இந்த புகார் தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, குஜராத் நிறுவனத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இந்த குற்றச்சாட்டை, குஜராத் மருந்து நிறுவனம் மறுத்துள்ளது.

நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் குறைவாக இருப்பதாக பிற நாடுகள் புகார் தெரிவிப்பது, இந்த ஆண்டில் நான்காவது முறையாக அரங்கேறி உள்ளது.

புதுடில்லி-குஜராத்தில் தயாரிக்கப்பட்டு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்து தரமற்று இருந்ததால், 30க்கும் அதிகமானோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை

மூலக்கதை