துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் வரலாற்று சாதனை

தினமலர்  தினமலர்
துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் வரலாற்று சாதனை



இஸ்தான்புல் : துருக்கி அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேற்காசிய நாடான துருக்கியின் அதிபராக, 2003 முதல், ரெசெப் தையிப் எர்டோகன், 69, பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின், துருக்கியில், கடந்த 14ல் அதிபர் தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில், நீதி மற்றும் மேம்பாட்டு கட்சித் தலைவரும், அதிபருமான எர்டோகனுக்கும், குடியரசு மக்கள் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான கெமல் கிலிக்டரோக்லுக்கும் இடையே போட்டி நிலவியது.

இதில், அதிபர் எர்டோகனுக்கு, 49.6 சதவீத ஓட்டுகளும், கெமல் கிலிக்டரோக்லுக்கு, 44.7 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

துருக்கி தேர்தல் சட்ட நடைமுறைப்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெறுபவரே வெற்றி பெற்றவர். அவ்வாறு பெறாவிட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

இதையடுத்து, கடந்த 28ல், அதிபர் பதவிக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.

அதன்படி, அதிபர் எர்டோகன் 52.2 சதவீத ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லு, 47.8 சதவீத ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

துருக்கியில் மேலும் 5 ஆண்டுகளுக்கு, எர்டோகன் ஆட்சி புரிய உள்ளார். இதன்வாயிலாக 26 ஆண்டுகளுக்கு அதிபராக இருந்து சாதனை படைக்க உள்ளார்.

தேர்தல் வெற்றி குறித்து பேசிய அதிபர் எர்டோகன், ''இது வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். துருக்கியின் நலனுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்,'' என்றார். இந்த வெற்றியை, எர்டோகன் ஆதரவாளர்கள் நாடு முழுதும் கொண்டாடினர்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் எர்டோகனுக்கு, நம் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இஸ்தான்புல் : துருக்கி அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.மேற்காசிய நாடான

மூலக்கதை