ஸ்டாலின் தமிழ் பற்று அரசியல் சார்ந்தது தான்: தமிழிசை சவுந்திரராஜன்

தினமலர்  தினமலர்
ஸ்டாலின் தமிழ் பற்று அரசியல் சார்ந்தது தான்: தமிழிசை சவுந்திரராஜன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை பேட்டி:



வேறு எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம், தமிழகத்தின் செங்கோலுக்கு கிடைத்திருக்கிறது. எவ்வளவு கொள்கை மாறுபாடு இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழுக்கு பெருமை வரும்போது, முதல்வர் அதை அங்கீகரித்திருந்தால், உண்மையிலேயே, அவர் தமிழ் பற்றாளர். இல்லையெனில், அவரின் தமிழ் பற்று, அரசியல் சார்ந்தது தான் என்பது என் கருத்து.

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் நடந்த சோதனையின் போது, வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்க முயற்சித்து, அவர்களின் வாகனங்களை, தி.மு.க.,வினர் சேதப்படுத்தினர்.

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை:

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய, தி.மு.க.,வினரை போலீஸ் துறை உடனே கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம், தாமாக முன்வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத்தர வேண்டும். அரசின் உச்சபட்ச அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

'போலீசுக்கு சொல்லாம போனா இப்படித் தான் அடி வாங்கணும்'னு, தி.மு.க., அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதியும், 'ரெய்டு குறித்து எந்த தகவலும் இல்லை'ன்னு கரூர், எஸ்.பி.,யும் சொல்லிட்டாங்களே... அதிகாரிகள் வாங்கிய அடிக்கு, இனி, நீதிமன்றத்தில் தான் நீதி கேட்கணும்!

தமிழக காங்., செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் பேட்டி:

எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்ட அமலாக்கத் துறையை ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது. 2014 முதல், 121 பேர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், 95 சதவீதம் பேர் எதிர்க்கட்சிக்காரர்கள். கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வரி சலுகை, கடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, ஏழை மக்கள் பயன் பெறும், 100 நாள் வேலை திட்டத்திற்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது.

இந்த, 100 நாள் வேலை திட்டத்துல, எந்த அளவுக்கு மோசடி, முறைகேடுகள் நடக்குது என்பது இவருக்கு தெரியுமா?

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை பேட்டி:வேறு எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம், தமிழகத்தின் செங்கோலுக்கு கிடைத்திருக்கிறது. எவ்வளவு கொள்கை மாறுபாடு இருந்தாலும்,

மூலக்கதை