‛சென்னை ஸ்டோரி' - சமந்தா நடிக்கும் ஆங்கில் பட தலைப்பு

தினமலர்  தினமலர்
‛சென்னை ஸ்டோரி  சமந்தா நடிக்கும் ஆங்கில் பட தலைப்பு

சாகுந்தலம் படத்தை அடுத்து தற்போது விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதையடுத்து சிட்டாடல் என்ற வெப் தொடரின் இந்திய பதிப்பில் நடிக்கிறார். இதன்பிறகு அவர் ஒரு ஆங்கில படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு சென்னை ஸ்டோரி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிலிப் ஜான் என்பவர் இயக்குகிறார்.

இங்கிலாந்தை சார்ந்த ஹீரோ தனது தாயாரின் மரணத்தை அடுத்து இந்தியாவில் உள்ள தன்னுடைய மூதாதையர்களை பார்ப்பதற்காகவும், தனது தாயாரிடம் இருந்து பிரிந்த தந்தையை கண்டுபிடிப்பதற்காகவும் இந்தியா வருகிறார். அப்படி சென்னை வருபவர் இங்குள்ள கலாச்சாரங்களில் ஈர்க்கப்படுவதோடு, சமந்தா மீது அவருக்கு காதல் ஏற்படுகிறது என்பது போன்ற கதையில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

மூலக்கதை