நான் நலமாக இருக்கிறேன் : சுரேஷ்கோபி வெளியிட்ட தகவல்

தினமலர்  தினமலர்
நான் நலமாக இருக்கிறேன் : சுரேஷ்கோபி வெளியிட்ட தகவல்

மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்முட்டிக்கு இணையாக பரபரப்பாக நடித்து வந்த இவர் அரசியலில் களம் இறங்கியதால், சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் முன்பு போல பரபரப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது கருடன் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி.

இந்த நிலையில் சுரேஷ் கோபிக்கு உடல் நலக்குறைவு என்பது போல சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவ ஆரம்பித்தது. இந்த செய்தி சுரேஷ் கோபியின் பார்வைக்கு வந்ததும் உடனடியாக இதுகுறித்த உண்மையை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, “நான் நலமாக இருக்கிறேன். கடவுளின் அருளால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது ஆலுவாவில் உள்ள யு.சி கல்லூரியில் நடந்துவரும் கருடன் பட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன். இந்த செய்தி வந்ததும் இதுகுறித்து அக்கறையுடன் என்னை விசாரித்த அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

மூலக்கதை