அமலாக்கத்துறை சோதனை சட்டீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
அமலாக்கத்துறை சோதனை சட்டீஸ்கர் முதல்வர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில்,‘‘ கடந்த ஒரு மாதமாக அமலாக்கத்துறை மாநிலத்தில் சோதனை நடத்தியது.  50  இடங்களில் நடத்திய சோதனையில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த 29ம் தேதி ராய்ப்பூர் மேயர் அய்ஜாஸ் தேபார், அவருடைய சகோதரர் அன்வர், மதுபான ஆலை அதிபர் பல்தேவ் சிங் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை. அரசியல் ரீதியாக நடத்தப்பட்ட இந்த சோதனைகள்  மாநில அரசை சீர்குலைப்பதற்காகவே நடத்தப்பட்டுள்ளது.இதற்காக ஒன்றிய அரசு ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன’’ என்றார்.

மூலக்கதை