ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் வில்லியம்சன்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் வில்லியம்சன்

அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது, வலது முழங்கால் மூட்டில் பலத்த காயம் அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். விரைவில் நியூசிலாந்து திரும்பும் அவர், மருத்துவர்களின் ஆலோசனையுடன் அடுத்த கட்ட சிகிச்சை பெற உள்ளார். ‘தொடரின் தொடக்கத்திலேயே காயம் காரணமாக வில்லியம்சன் விலக நேர்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக வருந்துகிறோம். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் களத்துக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்துகிறோம்’ என்று டைட்டன்ஸ் அணி கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை