மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் ரைபாகினாவுடன் குவித்தோவா பலப்பரீட்சை

தினகரன்  தினகரன்
மயாமி ஓபன் டென்னிஸ்: பைனலில் ரைபாகினாவுடன் குவித்தோவா பலப்பரீட்சை

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் எலனா ரைபாகினா - பெத்ரா குவித்தோவா மோதுகின்றனர். அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவுடன் மோதிய கஜகிஸ்தான் வீராங்கனை ரைபாகினா 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 51 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் மோதிய பெத்ரா குவித்தோவா (செக்.) 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி, 12 நிமிடம் போராடி வென்றார். இறுதிப்போட்டியில் குவிதோவா - ரைபாகினா மோதுகின்றனர்.அரையிறுதியில் அல்கரஸ்: மயாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் களமிறங்கிய நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கரஸ் (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தினார். ரஷ்யாவின் மெத்வதேவ், கரென் கச்சனோவ், இத்தாலி வீரர் யானிக் சின்னர் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

மூலக்கதை