கோலாகல தொடக்க விழா

தினகரன்  தினகரன்
கோலாகல தொடக்க விழா

ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் முதல் லீக் ஆட்டத்துக்கு முன்பாக, பிரமாண்டமான தொடக்க விழா மாலை 6.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பிரபல நடிகைகள் தமன்னா பாட்டியா, ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளன. 2018க்கு பிறகு புல்வாமா தாக்குதல், கொரோனா அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் 4 ஆண்டுகளாக தொடக்க விழா ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் உள்ளூர்/வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடக்க உள்ளது. நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா.

மூலக்கதை