திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்பவர் கைது

தினகரன்  தினகரன்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்பவர் கைது

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டார். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத பாண்டியம்மாள், 9 மாதங்களாக, தான் கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியுள்ளார். தற்போது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்வதுபோல நடித்து குழந்தையை திருடிச்சென்றுள்ளார்.

மூலக்கதை