ஸ்மார்ட் சிட்டி கடைகள் வாடகை அதிகம்; கவுன்சிலர்களுக்கு கமிஷன்;

தினமலர்  தினமலர்
ஸ்மார்ட் சிட்டி கடைகள் வாடகை அதிகம்; கவுன்சிலர்களுக்கு கமிஷன்;

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


''பல கோடி ரூபாய் செலவழிச்சு கட்டிய கடைகள், ஏழு மாசமா பூட்டிக் கிடக்குவே...'' என்றபடியே, சூடான மெது வடையை கடித்தார், அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''வேலுார் புது பஸ் ஸ்டாண்ட் இருக்குல்லா... இதை, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, 53 கோடி ரூபாய் செலவழிச்சு, விரிவாக்கம் செஞ்சாவ... போன வருஷம், ஜூன் மாசம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சாரு வே...

''பஸ் ஸ்டாண்ட்ல, 83 கடைகள் கட்டியிருக்காவ... இதுல, 68 கடைகளை மட்டும் வாடகைக்கு விட முடிவு செஞ்சாவ வே... ஒரு கடைக்கு, 20 லட்சம் ரூபாய், 'அட்வான்ஸ்' வாடகை, 50 ஆயிரம்... இது தவிர கவுன்சிலர்களுக்கு தனியா, 5 லட்சம் ரூபாய் வெட்டணும்...


''வாடகை அதிகம்கிறதால, கடையை எடுக்க யாரும் வரல வே... இப்ப, ஒரு பெரிய நிறுவனத்துக்கு மொத்தமா எல்லா கடைகளையும் வாடகைக்கு விடப் போறாவளாம்... அதனால தான், மத்தவங்க எடுக்க முடியாதபடி, வாடகையை முதல்லயே உசத்தி அறிவிச்சதா, வியாபாரிகள் குற்றம் சாட்டுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''பல கோடி ரூபாய் செலவழிச்சு கட்டிய கடைகள், ஏழு மாசமா பூட்டிக் கிடக்குவே...'' என்றபடியே, சூடான மெது வடையை கடித்தார், அண்ணாச்சி.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார்,

நிலத்தில் முதலீடு செய்யும் ஆசை மக்களுக்கு அதிகரித்து வந்தாலும், எங்கு எப்படி எவ்வளவு கொடுத்து வாங்குவது போன்ற குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மூலக்கதை