ரூ200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி அமலாக்கத்துறை முன் ஆஜர்

தினகரன்  தினகரன்
ரூ200 கோடி பணமோசடி வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி அமலாக்கத்துறை முன் ஆஜர்

புதுடெல்லி: ரூ200 கோடி பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி ரூபாய் மோசடி வழக்கை, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. பிரபல நடிகை நோரா ஃபதேஹி உள்ளிட்டோரிடம் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தியது. இந்நிலையில் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன்  நோரா ஃபதேஹிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து அவர் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி வழக்கு ெதாடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மூலக்கதை