சீனா நடத்திய கூட்டம் புறக்கணித்தது இந்தியா

தினமலர்  தினமலர்
சீனா நடத்திய கூட்டம் புறக்கணித்தது இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய அமைப்பு சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள 19 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய சி.ஐ.டி.சி.ஏ., எனப்படும், சீன சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு அமைப்பு, கடந்த 21ல் கூட்டம் ஒன்றை நடத்தியது.

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் என்ற இடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் 19 நாடுகள் பங்கேற்றன.

இந்தோனேஷியா, பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஓமன், தென் ஆப்ரிக்கா, கென்யா, மொசாம்பிக், தான்சானியா, செஷல்ஸ், மடகாஸ்கர், மொரீஷியஸ், ஜிபூடி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.

இந்தியா இதில் பங்கேற்கவில்லை. அழைப்பு விடுக்காததால் கூட்டத்தை புறக்கணித்ததாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சீனாவிற்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையே கடல் பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு ஒத்துழைப்பு நடைமுறையை நிறுவ சீனா முன்மொழிந்துள்ளது.

தேவைப்படும் நாடுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளையும் அளிக்க தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

புதுடில்லி : சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய அமைப்பு சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள 19 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா

மூலக்கதை