10 ஆண்டுகளாக தரப்படும் நெருக்கடி: அதிரடி தீர்வு காண விஜய் முடிவு?

தினமலர்  தினமலர்
10 ஆண்டுகளாக தரப்படும் நெருக்கடி: அதிரடி தீர்வு காண விஜய் முடிவு?

கடந்த 10 ஆண்டுகளாக, நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின்போது, சிக்கல்கள் ஏற்படுவதால், அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் பிரவேசம் தான் என, அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக, சில நாள் கழித்து, இணைத் தலைப்பை நீக்கிய பின், தலைவா படம் வெளியானது.கடந்த 2014ல் ராஜபக்சேவுக்கு நெருக்கமான 'லைக்கா' நிறுவனம் தயாரித்த, கத்தி படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது. 2015ல் புலி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித் துறை 'ரெய்டு' காரணமாக, அதிகாலை காட்சிகள் ரத்தாகின.

மேலும் 2021ல் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது, வருமான வரித் துறையினர், விஜய் வீட்டில் ரெய்டு நடத்தினர்.

கடந்த 2022 ஏப்., 14ல், பீஸ்ட் படம் வெளியாக இருந்த நிலையில், கே.ஜி.எப்., படம் காரணமாக, ஒரு நாள் முன்னதாக பீஸ்ட் வெளியானது.தற்போது, 2023ல் வெளியாக உள்ள வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டுக்கு, ஆந்திராவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், படப்பிடிப்பில் யானையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகாரும் கிளம்பி உள்ளது.ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு ஆண்டும் தன் பட வெளியீட்டின்போது பிரச்னையை சந்திக்கும் விஜய், இதை நிரந்தரமாக தீர்க்க, அரசியலை கையில் எடுத்துள்ளார்.சத்தமில்லாமல் தன் ரசிகர் மன்றம் வாயிலாக களமிறங்க காத்திருக்கிறார்.- நமது நிருபர் -

கடந்த 10 ஆண்டுகளாக, நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின்போது, சிக்கல்கள் ஏற்படுவதால், அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் பிரவேசம் தான் என, அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.nsmimg1030352nsmimg நடிகர்

மூலக்கதை