புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

தினகரன்  தினகரன்
புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மே மாதத்தில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவி நவ.17ல் உச்சநீதிமன்றம் வழக்கை விசரிக்க தொடங்கிய பிறகு நியமிக்கப்பட்டுள்ளது. 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்ந்தெடுத்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் என நீதிபதி ஜோசப் தெரிவித்துள்ளார். பரிசீலிக்கப்பட்ட 4 அதிகாரிகளில் அருண் கோயல்தான் இளையவர் என்பதை கோப்பில் இருந்து வாசித்தார் நீதிபதி ஜோசப்.     மேலும் ஒன்றிய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்? இவ்வளவு நாட்கள் ஒன்றிய அரசு என்ன செய்தது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்தான விளக்கத்தை செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசாரணையில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை