சாதித்துக் காட்டிய செங்கல்பட்டு கூலித்தொழிலாளியின் மகள்: மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்த ரக்சயா

தினகரன்  தினகரன்
சாதித்துக் காட்டிய செங்கல்பட்டு கூலித்தொழிலாளியின் மகள்: மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்த ரக்சயா

ஜெய்பூர் : செங்கல்பட்டு கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவரது மகள் ரக்சயா கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறுவயது முதலே அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு குடும்ப வறுமையை கூட பொருட்படுத்தாமல் சொந்த முயற்சியில் பகுதிநேர வேலை செய்து அழகி போட்டிக்காக ரக்சயா தம்மை தயார்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாநில அளவிலான அழகி போட்டி ஜெய்பூரில் கடந்த 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடந்தது. இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்தார். டிசம்பர் மாதம் மிஸ் இந்திய அழகி போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வான 750-கும் மேற்பட்டோர் இறுதி போட்டிக்காக மேடை ஏற உள்ளனர். இதில் வெற்றி பெறுபவர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்வார். அந்த பட்டத்தை தம்மால் நிச்சயம் வெல்ல முடியும் என்று தமிழினத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். 

மூலக்கதை