இது உங்கள் இடம்: ஹிந்துக்களை விமர்சிப்போர் கொட்டம் அடங்கும்!

தினமலர்  தினமலர்
இது உங்கள் இடம்: ஹிந்துக்களை விமர்சிப்போர் கொட்டம் அடங்கும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உலக. நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


க.கணபதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, இப்பகுதியில், திருச்சியைச் சேர்ந்த எஸ்.செல்வசுந்தரி என்ற வாசகி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை வாசிக்கும் போதே, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் சொல்வது போன்ற ஒரு நிலைமை உருவாகி விடாதா என்றும் எண்ணத் தோன்றியது. ஆனால், நிதர்சனம் அவ்வாறு இல்லை.

ஹிந்துக்கள், ஹிந்து மத கடவுள்கள், கோவில்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை, திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.,வினரும் எள்ளி நகைத்து, ஏகடியம் பேசி, கிண்டலும், கேலியும் செய்வது இன்று நேற்று துவங்கியதல்ல. 60 ஆண்டுகளாக, இவ்விரு கட்சிகளும் அதைத் தான் செய்து வருகின்றன; தொடர்ந்து செய்யவும் உள்ளன. இவர்களின் இந்த துணிச்சல் செயல் தொடர்வதற்கு காரணம், ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததே.



ஹிந்துக்கள் மத்தியில் மட்டும், முன்னரே ஒற்றுமை உருவாகி இருந்தால், தி.மு.க., 1967ல், தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கவே முடியாது. கோவில்களின் வாசல்களில், கடவுள் மறுப்பு வாசகங்களுடன் கூடிய, ஈ.வெ.ரா., சிலைகளும் நிறுவப்பட்டிருக்காது. மேலும், ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால், பிள்ளையார் சிலையை உடைத்தோரை ஆதரித்து இருப்பரா? ராமனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஆனந்தித்தோருக்கு ஓட்டளித்து இருப்பரா? அத்துடன், தி.க., மற்றும் தி.மு.க.,வினர், ஹிந்து மதத்தை கேலியும், கிண்டலும் செய்வதை, ஹிந்துக்களிலேயே ஒரு கூட்டம் சிரித்து, ரசித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அவ்வளவு ஏன்... ஒரு வாரத்துக்கு முன், திருச்செந்துார் கோவிலில் முருகனுக்கு துலாபார நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு வந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆ.ராஜாவின், 'விபச்சாரிகளின் மகன்கள்' பேச்சை ஆதரித்து அறிக்கை விடுத்துள்ளார்.



ஹிந்துக்கள் அனைவரும் விபச்சாரிகளின் மகன்கள் என்றால், சீமானும் அவர்களில் ஒருவர் தானே? சீமான், ஹிந்து அல்ல. கிறிஸ்துவர் என்றால், அந்த கிறிஸ்தவர் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவானேன்? ஏதாவது சர்ச்சுக்கு சென்று, அங்கல்லவா வேண்டுதலை நிறைவேற்றி இருக்க வேண்டும்?

ஹிந்துக்களில், 90 சதவீதம் பேர், இப்படித் தான் சீமானை போல அறிவு கெட்டு, புத்தி கெட்டு, மூளை கெட்டு, தன்மானம் கெட்டு, சூடு சொரணையற்று, நடமாடும் பிணங்களாய் உலாவிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எல்லாம் மாறினால் மட்டுமே, ஹிந்துக்களை, ஹிந்து மதத்தை விமர்சிப்போரின் கொட்டமெல்லாம் அடங்கும். அந்த நாள் வெகு துாரத்தில் இல்லை என்று, நம்புவோமாக!

உலக. நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:க.கணபதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜாவின்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை