ஆய்வாளர்கள் விளக்கம் இது 2வது அலையா? 3வது அலை ஆரம்பமா?

தினகரன்  தினகரன்
ஆய்வாளர்கள் விளக்கம் இது 2வது அலையா? 3வது அலை ஆரம்பமா?

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3வது அலை இம்மாதம் தொடங்கி, அக்டோபரில் உச்சம் அடையும் என நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். அதற்கேற்ற வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினசரி பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் இதுதான் 3வது அலையின் ஆரம்பமா என சந்தேகம் எழுந்து வந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா 2வது அலையே இன்னும் முடியவில்லை என ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.இது குறித்து அரியானாவின் அசோகா பல்கலைக்கழக இயற்பியல் மற்றும் உயிரியல் துறை பேராசிரியர் கவுதம் மேனன் கூறுகையில், ‘‘தற்போது பாதிப்பு அதிகரிப்பதை, கொரோனா 2வது அலையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கிறாம். இதை புதிய அலை என கூற முடியாது.’’ என்றார்.கணித அறிவியல் நிறுவன ஆய்வாளர் சிதப்ரா சின்கா கூறுகையில், ‘‘நோய் பரப்புவோர் எண்ணிக்கையை மதிப்பிடும் ஆர் மதிப்பு 8 மாநிலங்களில் 1க்கும் அதிகமாக உள்ளது. அதாவது, நோய் பாதித்த 100 பேர் மற்ற 100 பேருக்கு நோயை பரப்புகின்றனர் என்பதே இதன் அர்த்தம். இது புதிய பாதிப்புகள் அதிகரிப்பதை காட்டுகிறது. இதற்காக மக்கள் பீதி அடையக்கூடாது. நோய் பரவல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், விரைவாக தடுப்பூசி போடுதல் போன்றவற்றின் மூலமே ஆர் மதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்’’ என்றார்.மீண்டும் 40 ஆயிரம்* இந்தியாவில் 6 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக சரிந்து ஆறுதல் தந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு மீண்டும் 40,000 தாண்டி உள்ளது. * நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 625 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரத்து 132.* கடந்த 24 மணி நேரத்தில் 562 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 757.* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 353. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.உலகளாவிய பாதிப்பு 20 கோடி தாண்டியதுஉலகளவில் கொரோனா மொத்த பாதிப்பு 20 கோடியை எட்டியது. வேர்ல்டு ஓ மீட்டர் இணையதள புள்ளி விவரங்களின்படி, மொத்த கொரோனா பாதிப்பு 20 கோடியே 48 லட்சத்து 3 ஆயிரத்து 774 ஆக இருந்தது.கொரோனா இறப்பு மறைக்கப்படுகிறதா?கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருந்த நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையை பல மாநிலங்கள் குறைத்து காட்டியிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதே போல பல கொரோனா பலியையும் ஒன்றிய அரசு மறைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று அளித்த பதிலில், ‘சில கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படாமல் விடுபட்டிருக்கலாம். ஆனால் எந்த இறப்புகளும் விடுபட வாய்பில்லை. கொரோனா இறப்புகளை பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்படும். ஆனால் தாமதம் ஏற்பட்டாலும், முழுமையாக இறப்புகளை மாநிலங்கள் பதிவு செய்து, கொரோனா மரணங்களை திருத்தி வெளியிடுகின்றன. எனவே, கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவதாக கூறுவது உண்மையல்ல’ என தெரிவித்துள்ளது.

மூலக்கதை