கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை: 11 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

தினமலர்  தினமலர்
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை: 11 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடில்லி-கரும்பு விவசாயிகளின் நிலுவை தொடர்பாக, மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட 11 மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிர முன்னாள் எம்.பி.,யும், 'ஸ்வாபிமானி பக் ஷா' என்ற அமைப்பின் தலைவருமான ராஜூ அன்னா ஷெட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:திருப்பி விடுகின்றனவிவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் அதற்கான தொகையை தர வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், தமிழகம், உ.பி., மஹாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு ஆலைகள், பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நிலுவை வைத்துள்ளன.அவை விவசாயிகளுக்கான பணத்தை வேறு வழியில் திருப்பி விடுகின்றன. அதனால், ஆலைகளின் சர்க்கரை கையிருப்பை விற்று, விவசாயிகளின் நிலுவையை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஒத்திவைப்புஇந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமை யிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:கரும்பு விவசாயிகளின் நிலுவை தொடர்பாக, மத்திய அரசும், தமிழகம், பஞ்சாப், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 11 மாநில அரசுகளும் பதில் அளிக்குமாறு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது.வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை