நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: மும்பை போலீசார் நள்ளிரவில் அதிரடி

மும்பை: நிர்வாண படங்களை எடுத்தல், வெளியிடுதல் போன்ற புகார்களின் அடிப்படையில் பிரபல பாலிவுட் நடிகையின் கணவரை மும்பை போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். மகாாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறை அவரை நேற்று நள்ளிரவு கைது செய்தது.

அதிரடியாக நள்ளிரவில் போலீசார் ராஜ்குந்த்ராவை கைது செய்ததால், பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ரலே வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த பிப்ரவரியில் பெண்களின் படங்களை ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர் விசாரணைக்கு பின்னர், இவ்வழக்கின் முக்கிய சதிகாரராக செயல்பட்ட ராஜ் குந்த்ராவை கைது செய்துள்ளோம். இவ்வழக்கில் அவருக்கு எதிரான போதுமான சான்றுகள் எங்களிடம் உள்ளன.

மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது, ஆபாச புத்தகங்கள் வெளியிடல், பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்களை எடுப்பதற்காக நடிகர்களை கட்டாயப்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரு எஃப். ஐ. ஆர் அடிப்படையில் கடந்த வாரம் ஒன்பது பேரை கைது செய்தோம். இவர்கள் வெளியிட்ட ஆபாச படங்கள் கட்டண மொபைல் செயல்களில் வெளியிடப்பட்டன.

அவை,  ஸ்ட்ரீம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன’ என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில், ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடிகை பூனம் பாண்டே தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.



அதில், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து சட்டவிரோதமான முறையில் தனது படங்களை பயன்படுத்தி வருவதாகவும், அதனால் அவர்களுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாக தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தின் தொடர்ச்சியாகத்தான் ராஜ் குந்த்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன

.

மூலக்கதை