எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் பணியில் சரத்பவார் ஈடுபட்டுள்ளார்!: தேசியவாத காங். செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தகவல்..!!

தினகரன்  தினகரன்
எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் பணியில் சரத்பவார் ஈடுபட்டுள்ளார்!: தேசியவாத காங். செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தகவல்..!!

மும்பை: எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டும் பணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், சரத்பவாரை சந்தித்து பேசியதை பற்றி குறிப்பிட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக நவாப் மாலிக் தெரிவித்தார். மும்பையில் சரத் பவாரை, பிரசாந்த் கிஷோர் நேற்று சந்தித்து பேசியது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்டி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோர் யோசனையை சரத்பவார் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். மூன்று மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம் பற்றி பேசவில்லை. அதேவேளையில் எதிர்கட்சிகளை ஓர் அணியில் திரட்ட சரத்பவார் விரும்புகிறார். வரும் காலங்களில் எதிர்கட்சிகளை ஒன்று சேர்க்கும் பணிகள் தொடங்குவது உறுதி என்று குறிப்பிட்டிருந்தார். 

மூலக்கதை