டெல்லி போராட்டம் 7 மாதங்கள் நிறைவடைவதையொட்டி 26ல் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

தினகரன்  தினகரன்
டெல்லி போராட்டம் 7 மாதங்கள் நிறைவடைவதையொட்டி 26ல் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

டெல்லி : டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 7 மாதங்கள் நிறைவடைவதையொட்டி வரும் 26ம் தேதி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6 மாதங்களை கடந்தது. விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி வரும் 26ம் தேதி 7 மாதங்கள் நிறைவடைந்தது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.  சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. குடியரசு தலைவருக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மூலக்கதை