மரம் கடத்தல் அதிகரிப்பு: கேரள அரசு விளக்கம் அளிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

தினகரன்  தினகரன்
மரம் கடத்தல் அதிகரிப்பு: கேரள அரசு விளக்கம் அளிக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ரோஸ்வுட் மரங்கள் அதிகளவில் வெட்டி கடத்தப்படுவதாக குறித்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான முரளிதரன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் கவனத்துக்கு எடுத்து சென்றார். இதைத் தொடர்ந்து, இந்த கடத்தல் பற்றிய விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ள ஜவடேகர், ரோஸ்வுட் கடத்தல் பற்றி விரிவான அறிக்கை அளிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டு, கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முரளிதரன் அளித்த பேட்டியில், ‘‘ சந்தனம், தேக்கு, ரோஸ்வுட் மரங்களை வெட்டக் கூடாது என்ற கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், மாநில அரசின் விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கான மதிப்புள்ள ரோஸ்வுட் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. ஆளும் இடதுசாரி கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர். அவர்களையும் விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை