கேரளாவில் 5 நாட்கள்பலத்த மழை

தினகரன்  தினகரன்
கேரளாவில் 5 நாட்கள்பலத்த மழை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 3ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வாரமாக மழை சுமாராகவே பெய்தது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நாளை கொல்லம், பத்தனம்திட்டா ஆலப்புழா உள்பட 11 மாவட்டங்களிலும், 13ம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பத்தனம்திட்டா உள்பட 13 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  14ம் தேதி இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மூலக்கதை