எதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., போட்டி

தினமலர்  தினமலர்
எதிர்க்கட்சி தலைவர் பதவி: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., போட்டி

சென்னை : சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில், ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., இடையே, போட்டி நிலவுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில், 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக, ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., ஆகிய இருவரும் விரும்புவதாக, தகவல் வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக, இ.பி.எஸ்., தேர்வு செய்யப்படுவார் என, அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

மூலக்கதை