ஹமாஸ் அமைப்பினர் கைகளில் இந்தியரின் 'கிரிப்டோகரன்சி'

தினமலர்  தினமலர்
ஹமாஸ் அமைப்பினர் கைகளில் இந்தியரின் கிரிப்டோகரன்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : நம் நாட்டைச் சேர்ந்த ஒருவரது 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் திருடப்பட்டு, அது மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கர வாதிகள் கைக்கு சென்று உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


'ஆன்லைன்' வாயிலாக பயன்படுத்தப்படும் கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். டில்லியின் பஷ்சிம்விஹார் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருந்தார்.கடந்த 2019ல் அவரது கணக்கில் இருந்த 30.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகள் திருடப்பட்டன.

இது தொடர்பாக அவர் டில்லி போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் தற்போதைய மதிப்பு 4.5 கோடி ரூபாய்.இந்நிலையில் மேற்காசிய நாடான இஸ்ரேலின் பயங்கரவாத தடுப்பு அமைப்பு, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் கிரிப்டோகரன்சி முதலீடுகளை முடக்கியது.


இது தொடர்பான தகவல்களை இந்தியா உள்பட பல நாடுகளுக்கும், கடந்தாண்டு ஜூலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தகவல்கள் குறித்து விசாரிக்கும்படி டில்லி போலீசின் சிறப்பு பிரிவுக்கு போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா உத்தரவிட்டிருந்தார்.இதன்படி, சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

டில்லியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் திருடப்பட்ட கிரிப்டோகரன்சியின் ஒரு பகுதி, பல கைகள் மாறி, இறுதியில் ஹமாஸ் பயங்கர அமைப்பின் கணக்குக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் எகிப்தில் உள்ள சிலருக்கு, மீதமுள்ள கிரிப்டோகரன்சிகள் கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது.கிரிப்டோகரன்சிகள் திருட்டு தொடர்பான மற்ற வழக்குகளிலும், தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

புதுடில்லி : நம் நாட்டைச் சேர்ந்த ஒருவரது 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் திருடப்பட்டு, அது மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கர வாதிகள் கைக்கு சென்று

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை