ரயில்வே ஸ்டேஷன்களில் மின் வாகன 'சார்ஜிங்' வசதி

தினமலர்  தினமலர்
ரயில்வே ஸ்டேஷன்களில் மின் வாகன சார்ஜிங் வசதி

புதுடில்லி : காற்று மாசை குறைக்கும் வகையிலும், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், ரயில்வே ஸ்டேஷன்களில் 'சார்ஜிங்' வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சகத்துடன், நிடி ஆயோக் பேச்சு நடத்தி வருகின்றது.

காற்று மாசை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகின்றது. 'பேம் - 2' திட்டத்தின் கீழ் நாடு முழுதும் 7,000 பஸ்கள், ஐந்து லட்சம் ஆட்டோக்கள் 55 ஆயிரம் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 லட்சம் இரண்டு சக்கர வாகனங்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்காக மானியமும் வழங்கப்படுகிறது.மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அவற்றுக்கு தேவையான 'சார்ஜிங்' வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வேயை பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்களில் சார்ஜிங் வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக ரயில்வே அமைச்சக உயரதிகாரிகளுடன், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிடி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசி வருகிறார். இது தொடர்பான கொள்கையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடில்லி : காற்று மாசை குறைக்கும் வகையிலும், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், ரயில்வே ஸ்டேஷன்களில் 'சார்ஜிங்' வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ரயில்வே

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை