கிரிப்டோ கரன்சியில் ரூ.70 லட்சம் இழந்த பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; தெலங்கானாவில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
கிரிப்டோ கரன்சியில் ரூ.70 லட்சம் இழந்த பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது; தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: தெலங்கான மாநிலம், கம்மம் மாவட்டம், கம்மம் நகரை சேர்ந்தவர் ராமலிங்கசாமி (38). இவர் ஆன்லைன் டிரேடிங்கில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து வந்தார். 2, 3 முறை நல்ல லாபம் கிடைத்த நிலையில் மேலும் பலரிடம் இருந்து பணம் பெற்று முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் உரிய அனுமதியில்லாமல் நடத்தப்பட்டு வரும் கிரிப்டோ கரன்சி பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படும். எனவே அதனை  தடை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்ததை அடுத்து மத்திய அரசு இதனை ரத்து செய்ய அமைச்சரவைக் கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சி ஆன்லைன் வர்த்தகத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ.70 லட்சம் கடன் ஏற்பட்டது. இதனால் பணம் கொடுத்தவர்களில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சிவபுரம் பஞ்யாத்து தலைவர் லட்சுமன்ராவ் கொடுத்த பணத்திற்கு ராமலிங்க சுவாமியின் கார், தங்க நகைகள் மற்றும் காசோலைகளை பெற்று கொண்டார். இதே போன்று ராமலிங்க சுவாமியிடம் பணம் கொடுத்த முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணம் கேட்டு அழுத்தம் கொடுத்தனர். பெரும் பணத்தை இழந்த ராமலிங்கசாமி கடந்த 22ம் தேதி தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.   ராமலிங்கசாமி 2 நாட்கள் ஆகியும் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ராமலிங்கசாமி குளியலறையில் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் லாட்ஜில் ராமலிங்கசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராமலிங்கசாமி தனது மனைவிக்கு கிரிப்டோ கரன்சி இழப்புகளால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து ராமலிங்கசாமியின் மனைவி மற்றும் தந்தை வெங்கடநாராயணன்  போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை