இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 396 பேர் பலி.... ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 9,119 ஆக உள்ளது!!
புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.66 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.45 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 9,119 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,44,882 ஆக உயர்ந்தது.* புதிதாக 396 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,66,980 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,264 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,67,962ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,09,940 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 98.33% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.32% ஆக குறைந்துள்ளது.*இந்தியாவில் 1,19,38,44,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 90,27,638 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.