திரிணாமுல்லில் இணைந்ததால் பாஜ.வின் எம்பி பதவியை துறந்தார் பபுல் சுப்ரியோ

தினகரன்  தினகரன்
திரிணாமுல்லில் இணைந்ததால் பாஜ.வின் எம்பி பதவியை துறந்தார் பபுல் சுப்ரியோ

புதுடெல்லி:  மேற்கு வங்க மாநிலம், அசான்சால் மக்களவை தொகுதி எம்பி.யாக பாஜ.வை சேர்ந்த பபுல் சுப்ரியோ இருந்தார். ஒன்றிய அமைச்சராகவும் இருந்தார். சமீபத்தில் செய்யப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, இவருடைய பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், கடந்த மாதம் பாஜ.வில் இருந்து விலகினார். நேற்று முன்தினம் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இதனால், பாஜ அளித்த எம்பி பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார். டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.பின்னர் சுப்ரியோ அளித்த பேட்டியில், ‘பாஜ.வில் இருந்து கனத்த இதயத்தோடு வெளியேறுகிறேன். பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எனது நன்றி.  நான் பாஜ.வில் இல்லாதபோது, வெற்றி பெற்ற தொகுதியை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் ராஜினாமா செய்கிறேன்,’ என்று கூறினார்.

மூலக்கதை