நாய்க்கு இருக்கும் மவுசு மனிதனுக்கு இல்லையே!...விமானத்தில் பறக்க ரூ.2.4 லட்சம் செலவு

தினகரன்  தினகரன்
நாய்க்கு இருக்கும் மவுசு மனிதனுக்கு இல்லையே!...விமானத்தில் பறக்க ரூ.2.4 லட்சம் செலவு

மும்பை: மும்பையை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர். இவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்க்கிறார். அதன் மீது அவருக்கு கொள்ளை பிரியம். இந்த செல்லத்துடன் ஏர் இந்தியா விமானத்தில் மும்பையில் இருந்து சென்னைக்கு சென்றார். அதற்கு மற்ற பயணிகளால் எந்த தொல்லையும் ஏற்படக் கூடாது என்பதற்காக, பிசினஸ் வகுப்பில் உள்ள 12 டிக்கெட்டுகளையும் அவரே வாங்கி விட்டார். ஒரு இருக்கைக்கான கட்டணம் ரூ.20 ஆயிரம். மும்பையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான பயண நேரம் 2 மணி நேரம்தான். தனது நாய்க்காக  ரூ.2.4 லட்சத்தை அவர் செலவு செய்துள்ளார். சில நேரங்களில் நாய்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட, மனிதர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தியாவில் செல்லப் பிராணிகளை, பயணிகளுடன் விமானத்தில் ஏற்றிச் செல்லும் ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியாதான். ஒரு பயணத்துக்கு 2 செல்லப் பிராணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும். முன்பதிவு செய்யப்படும் கேபினின் கடைசி இருக்கைகள் இவற்றுக்கு ஒதுக்கப்படும்.2 ஆயிரம் செல்ல பிராணிகள்கடந்தாண்டு ஜூன் முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையில், ஏர் இந்தியா விமானம் 2 ஆயிரம் செல்லப் பிராணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

மூலக்கதை