உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியது

தினகரன்  தினகரன்
உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியது

டேராடூன்: இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி ஆகிய 4 புனித தலங்களை வழிபடும் யாத்திரை ‘சார்தாம் யாத்திரை’ எனப்படுகிறது. இந்தாண்டுக்கான சார்தாம் யாத்திரை நேற்று தொடங்கியது. உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, முழு கொரோனா விதிமுறைகளுடன் யாத்திரை தொடங்கியது. முதல் நாளான நேற்று, அருகில் உள்ள கிராமவாசிகள் கோயில்களில் தரிசனம் செய்தனர். இந்த யாத்திரை நவம்பர் மாதம் வரை நடக்க உள்ளது. சார்தார் யாத்திரைக்கு 19,491 பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் பத்ரிநாத் கோயிலுக்கு அதிகப்பட்சம் ஆயிரம்  பக்தர்களும், கேதர்நாத்தில் 800, கங்கோத்ரியில் 600, யமுனோத்ரியில் 400 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மூலக்கதை