கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி ரூ.2000ல் இருந்து ரூ.4000 ஆகலாம்

தினகரன்  தினகரன்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி ரூ.2000ல் இருந்து ரூ.4000 ஆகலாம்

புதுடெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து மாதம் ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த நிதி உதவியை ரூ.4000 ஆக உயர்த்த வேண்டுமென ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இது தொடர்பாக அடுத்த வாரம் நடக்கும் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 467 மாவட்டங்களில் இருந்து 3,250 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அவற்றில் கலெக்டர் ஆய்வைத் தொடர்ந்து 667 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை