இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1 லட்சதிற்கும் அதிகமானோர் குணம்.. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்குகிறது!!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1 லட்சதிற்கும் அதிகமானோர் குணம்.. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்குகிறது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 88 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி  நேரத்தில், நாட்டில் கொரோனாவால்  புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 75,083 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55, 62,664 ஆக உயர்ந்தது.* புதிதாக 1,053 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,935 ஆக உயர்ந்தது..* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,01,468 பேர் குணமடைந்துள்ளனர்;.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 44,97,868 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,75,861 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 80.86% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.60% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 17.54% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 9,33,185 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 6,53,25,779 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!    மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 275017; குணமடைந்தோர் : 916348; இறப்பு : 33015தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46495; குணமடைந்தோர் :  491971 ; இறப்பு :8871    டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 30941 ; குணமடைந்தோர் : 213304 ; இறப்பு :  5014கேரளா : சிகிச்சை பெறுவோர் :39354 ; குணமடைந்தோர் : 98724 ; இறப்பு : 553கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் :    95354; குணமடைந்தோர் :423377 ; இறப்பு : 8145    ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :74518 ; குணமடைந்தோர் :551821 ; இறப்பு :  5410

மூலக்கதை